

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் ஆனாங்கூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு ஆனாங்கூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
ஆனாங்கூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சமீபத்தில் அறுவடை செய்த நெல்லை அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளனர். ஆனால் அவர்கள் விற்ற நெல்லுக்கான பணம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தாங்கள் விற்ற நெல்லுக்கான பணம் இதுவரை கிடைக்காத காரணத்தால் வேதனையடைந்த ஆனாங்கூர் பகுதி விவசாயிகள் சிலர் தங்கள் காதில் பூ சுற்றியபடி விழுப்புரம் கலெக்டர் அலுவகத்துக்கு வந்து கலெக்டரிடம் தங்கள் மனுவை அளித்து தங்களுக்கு நெல் விற்ற பணம் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.