செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 20-ந்தேதி நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 20-ந்தேதி நடக்கிறது
Published on

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் பிரதி மாதம் 3-வது வியாழக்கிழமை நடத்திட மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிடப்பட்டுள்ளார். அதன்படி, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com