விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
Published on

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பெறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும், தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன்பெறலாம்.

இந்த தகவலை கலக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com