விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 2023-க்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன் பெறலாம். கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கூட்டத்தில் கலந்துக் கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com