ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.
ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
Published on

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com