25-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25-ந் தேதி நடக்கிறது.
25-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25-ந் தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com