விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைளுக்கு தீர்வு காண உள்ளனர். மேலும் வேளாண் தொழில்நுட்பம், அரசு மானிய திட்டங்கள், வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வங்கி கடன் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com