கடலூ கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 31-ந் தேதி நடக்கிறது

கடலூ கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 31-ந் தேதி நடக்கிறது.
கடலூ கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 31-ந் தேதி நடக்கிறது
Published on

விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு கலெக்டர் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளார். இதில் கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். அதனால் கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள், உரிய பதில் அளிக்கவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டரால் அறிவுறுத்தப்படும். எனவே கடலூர் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com