விவசாயிகள் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது
Published on

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் எந்திரங்கள், விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இதில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com