தூத்துக்குடியில் ஏப்ரல் 17-ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 17-ம் தேதி ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் ஏப்ரல் 17-ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
Published on

இது தெடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான "விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" 17.04.2025 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் "முத்து அரங்கத்தில்" வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com