தூத்துக்குடியில் 22-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி கோட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வரும் 22-ந்தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று விவசாயம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
தூத்துக்குடியில் 22-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

22-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

இது தொடர்பாக தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.10.2026 அன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

எனவே, தூத்துக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com