கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை நடக்கிறது
கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
Published on

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை நடக்கிறது

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது. மேலும் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கெள்கின்றனர்.

விவசாயிகள் அளிக்கும் கேரிக்கை மனுக்கள் பெறப்பட்டு மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும். எனவே விவசாயிகள் இந்த குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என்றும் தங்களின் பல்வேறு கேரிக்கைகள் தெடர்பான மனுக்களையும் வழங்கி தீர்வுகாணலாம் என்றும் கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com