சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கிருஷ்ணராயபுரம் அருகே சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
Published on

சம்பா சாகுபடி

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர், மேலமாயனூர், கிழிஞ்சநத்தம், மணவாசி, கட்டளை, ரெங்கநாதபுரம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் நெற்பயிர் பிரதான பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இப்பகுதி விவசாயிகள் தங்களது வயல்களை தயார்படுத்தி சம்பா நெல் சாகுபடி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி கட்டளை, மேலமாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

நடவு செய்யும் பணி மும்முரம்

ஒருசில விவசாயிகள் நடவு பணிக்காக வரப்புகளை சமன் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாயனூர், மேலமாயனூர், கிழிஞ்சநத்தம், மணவாசி, கட்டளை, ரெங்கநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா நெல்சாகுபடி பணியில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வயல்களில் பயிர்களை நடவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதிகளில் சம்பா நெல்பயிர் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com