விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவலத்தில் கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரிக்கை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Published on

வேலூர் மாவட்டம், திருவலம் தபால் நிலையம் எதிரே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், கியாஸ், யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. போன்ற உரங்களின் விலை 2 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் விவசாயிகளின் பொருட்களுக்கு போதிய விலை உயர்த்தித்தராமல், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சிக்கின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கையில் கரும்புடன் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com