விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Published on

சேந்தமங்கலம்

மோகனூர் தாலுகா பகுதியில் உள்ள வளையப்பட்டி, புதுப்பட்டி, பரளி, அரூர் மற்றும் லத்துவாடி பகுதிகளில் சிப்காட் அமைக்க கூடாது என்று வலியுறுத்தி சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே விவசாயிகள் ஆதரவு கட்சிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிப்காட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் கைலாசம், மாநில தகவல் தொழில்நுட்ப தலைவர் மாதவன், கொ.ம.தே. கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் கணேசன், துணை செயலாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மோகனூர் தாலுகா பகுதியில் வளையப்பட்டி, பரளி, புதுப்பட்டி, அரூர் போன்ற பகுதிகளில் சிப்காட் அமைக்க கூடாது என்றும் அதனால் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆதரவு கட்சியினர் பலர் பேசினர். அதைத்தொடர்ந்து சிப்காட் எதிர்ப்பு குழுவினர் உள்பட அனைவரும் விவசாயிகள் நலனை பாதுகாத்திடு என்றவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com