லகிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

லகிம்பூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லகிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்பொது உத்தர பிரதேச மாநிலம் லகிம்பூர் பகுதியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து விவசாயிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தி முடித்தனர். இதனால் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com