நடுரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்...!

ஊஞ்சலூர் அருகே ஈரோடு-கரூர் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
நடுரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்...!
Published on

ஈரோடு மாவட்டம் சோழங்காபாளையம் நால்ரோடில் இன்று காலை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு மாத காலமாக ஈரோடு மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் இதனை வலியுறுத்தி சோழங்கபாளையம் நால்ரோடு சாலையில் நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் மற்றும் கொடுமுடி மண்டல துணை வட்டாட்சியர் பரமசிவம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது எடக்காடு நெல் கொள்முதல் நிலையத்தை வருகிற15-ம் தேதி முதல் திறக்கப்படும் என்ற அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com