விவசாயிகள் சாலைமறியல்

செங்கரும்புகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
விவசாயிகள் சாலைமறியல்
Published on

பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பை சேர்த்து வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இந்த ஆண்டு பொங்கலுக்கு செங்கரும்பையும் சேர்த்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 111 ஏக்கர் நிலப்பரப்பில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குத்தாலத்தை அடுத்த வானாதிராஜபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3 லட்சத்துக்கும் மேல் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு சாகுபடி செய்துள்ளனர். ஒரு சில விவசாயிகளிடம் மட்டும் தலா 500 கரும்பு கொள்முதல் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனைத்து விவசாயிகளிடமும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்க தங்கள் பகுதிகளிலும் கரும்பினை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் செங்கரும்புகளை கையில் ஏந்தி, தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் துரைராஜ் தலைமையில் மல்லியம் மெயின் ரோட்டில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களிடம் வருவாய்த்துறை, வேளாண்மை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com