விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

லக்கிபூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக மத்திய இணை மந்திரி மற்றும் அவரது மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம், மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர் வின்சென்ட் அமலதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் என்.கே.ராஜன் தொடங்கி வைத்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனன், விவசாய சங்க மாநில துணை தலைவர் முத்துராமு, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சந்தானம், சுப்பிரமணியன், ராஜா ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் அய்யாதுரை, சுடலைகாசி, பாஸ்கரன், மலைராஜன், வாசுதேவன் மற்றும் பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் குமரகுருபரன் நன்றி கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com