

கயத்தாறு:
கயத்தாறில் தமிழ் விவசாய சங்கத்தின் சார்பில், உயர் மின்கோபுரம் அமைக்கும் தனியார் நிறுவனங்களை கண்டித்து சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்களில் அத்துமீறி தனியார் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் நம்பிராஜன், மாவட்ட தலைவர்கள் நடராஜன், வெள்ளத்துரை பாண்டியன், தென்காசி மாவட்ட பொறுப்பாளர் தாமோதரன், செல்லப்பா, அவைத்தலைவர் வெங்கடசாமி, மாவட்ட துணை தலைவர் சாமியா, ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் அழகு பாண்டியன், கயத்தாறு ஒன்றிய தலைவர் முருகேசப்பாண்டியன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தாலுகா அலுவலகத்துக்கு பேரணியாக சென்று தாசில்தார் நாகராஜிடம் மனு கொடுத்தனர்.