கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தேசிய விவசாயிகள் சங்கத்தினர் மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விருதுநகர் மாவட்ட தலைவர் மாரியப்பன், நகர தலைவர் ராமசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com