குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை!

நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை!
Published on: 

சேலம்,

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்க ராஜ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிப்பு

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் 95 ஏக்கரில் சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து சேகரமாகும் குப்பைகளை கொண்டு வந்து அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.

நீர் மட்டம் குறைந்துவிடும்

இதற்காக ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்காக 15 லட்சத்திற்கும் மேற்பட்ட சேலம் மாநகர் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிடும். காற்று மாசு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும்.

திட்டத்தை அரசு கைவிட வேண்டும்

பொதுமக்களுக்கு கொடிய நோய்கள் உருவாகும். எனவே, கனிம வளங்கள் நிறைந்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் அமைய இருக்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X