அரசியல் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளும் பாசிசப் போக்கு: தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கார்த்திகா மீதான கைது நடவடிக்கையினை கைவிட வேண்டும் இபிஎஸ் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
Published on: 

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகாவை கைது செய்திருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகாவை இன்றைய தவெக அரசு அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பாசிசப் போக்கு

தேர்தல் நேரத்தில் போடப்படும் வழக்குகளை எல்லாம் காட்டி, தங்களின் வன்மத்தை தீர்த்துக் கொள்ள இன்றைய வன்ம குடோன் ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட பாசிசப் போக்கை கையாள்வது வெட்கக்கேடானது.

ஆச்சரியக்குறி அரசு

ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை கைது செய்ததன் மூலம், நாங்கள் எப்போதும் இவர்களைப் பார்த்து சொல்லக் கூடிய “Narcissistic Behaviour”- அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது விஜய் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசு.

“ஒருவேளை உங்கள் Convoy செல்லும் போது மக்கள் யாராவது மனு கொடுக்க வந்தால், வண்டியை நிறுத்தி மனுவை வாங்குவீர்களா? அல்லது, உங்கள் கான்வாய்-க்கு குறுக்கே வந்தார்கள் என்று வழக்கு பதிந்து கைது செய்வீர்களா?” என்ற சந்தேகம் இப்படிப்பட்ட கைதுகளால் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கார்த்திகா உள்ளிட்ட அக்கட்சியினர் மீதான கைது நடவடிக்கையினை கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com