நம்பியூரில் உண்ணாவிரதம் இருந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 13 பேர் கைது

நம்பியூரில் உண்ணாவிரதம் இருந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 13 பேர் கைது
நம்பியூரில் உண்ணாவிரதம் இருந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 13 பேர் கைது
Published on

நம்பியூர்

நம்பியூர் அருகே உள்ள கரட்டுப்பாளையம் ஊராட்சி, ஓணான்கரடு பகுதியில் 40-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதிய சேர்ந்த பொதுமக்கள் கடந்த 80 ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள வழித்தடத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த வழித்தடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி போட்டதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவ சிகிச்சை, அவசர தவை உள்பட பல்வேறு காரணங்களுக்காக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வழித்தடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தரக்கோரி அந்த பகுதிய சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர். இதுதொடர்பாக கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி கடந்த சில மாதங்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை நம்பியூர் தாசில்தார் பெரியசாமி தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்ற சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்டவர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நம்பியூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோபி ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ரங்கநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், 'கோபி ஆர்.டி.ஓ. நாளை (அதாவது இன்று) வந்துவிடுவார். எனவே போராட்டத்தை கைவிடுங்கள்,' என்றார். ஆனால் அதை ஏற்க மறுத்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 பண்கள் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com