தான் வாங்கிய கடனுக்காக ராஜஸ்தானில் 2 மகள்களை விற்க முயன்ற தந்தை

ராஜஸ்தானில் வாங்கிய கடனுக்காக 2 மகள்களை விற்க முயன்ற கொடூர தந்தைக்கு எதிராக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
padma and sabna
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் கச்சேரி தெருவில் வசித்து வரும் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பத்மா (25) மற்றும் சப்னா (23) ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர். அவர்கள் அளித்துள்ள இந்த புகார் மனு, ராஜஸ்தானில் நிலவி வரும் மிக கொடூரமான சமூக அவலத்தை தமிழ்நாட்டிலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

தொழிலில் நஷ்டம்

இவர்கள் தங்கள் குடும்பத்துடன் கச்சேரி தெருவில் வசித்து வந்தனர். இவர்களுடைய தந்தை தனராம். மேற்கு ரதவீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடன் சுமை அதிகமானது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மனைவி சாந்தி தேவியை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்று ஒரு கோவிலில் விட்டு விட்டு வந்துவிட்டார்.

அஞ்சல் வழி கல்வி

ஆனால் அந்த மாணவிகள் தங்களுடைய தந்தைக்கு தெரியாமல், வீட்டு வேலை செய்து கொண்டே அஞ்சல் வழி கல்வி மூலம் 12ம் வகுப்பு வரை படித்தனர். இந்த நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாததால், வீட்டு உரிமையாளர் கடைக்கு வேலைக்கு செல்லும்படி கட்டாயப்படுத்தி அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தினார். இதனால் இருவரும் வேலைக்கு செல்ல தொடங்கினர்

விற்க முயற்சி

இந்நிலையில் தனராம் தன் வாங்கிய கடனுக்காக தன்னைடைய சொந்த மகள்களை கொத்தடிமையாக விற்க முயற்சி செய்து வந்துள்ளார். தனது தந்தைக்கு எதிராக புகார் அளிக்க வந்தது தெரிய வந்தால் தங்களுடைய உறவினர்கள் அடித்து உதைத்து ஊனமாக்கி தங்களை சொந்த ஊருக்கே அழைத்து சென்று விடுவார்கள் என கண்ணீருடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com