ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கொலை செய்த மாமனார்


ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கொலை செய்த மாமனார்
x

தனது ஆசைக்கு இணங்குமாறு மருமகளுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் அருள்ஜோதி. கணவர் உயிரிழந்ததால் தனது குழந்தைகளுடன் மாமனார் சேட்டு என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அருள்ஜோதியின் மாமனார் சேட்டு, மருமகளிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். தனது ஆசைக்கு இணங்குமாறு அருள்ஜோதிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

மாமனாரின் தவறான ஆசைக்கு அருள்ஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேட்டு கத்தியால் அருள்ஜோதியை சரமாரியாக குத்தினார். இதில் அருள்ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாமகிரிபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

1 More update

Next Story