குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் தந்தை உயிரிழப்பு - மகன் கைது

சோளிங்கர் அருகே குடும்ப பிரச்சனையில் தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் தந்தை உயிரிழப்பு - மகன் கைது
Published on

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் கஜேந்திரன்(வயது43), இவர் கூலித்தொழிலாளி.இவருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும் ,சுரேஷ் (15) என்ற மகனும்,சமித்ரா(14) என்ற மகளும் உள்ளனர். கஜேந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக சரஸ்வதி தனது தாய் வீடான ராஜாநகரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முனபு கஜேந்திரனின் மகன் சுரேஷ் ராஜாநகரத்தில் நடைப்பெற்ற திருவிழாவிற்கு சென்றுள்ளார் .அங்கு குளத்திற்கு குளிக்கப் சென்றபோது நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். தன் மகன் இறந்த சோகத்தில் கஜேந்திரன் குடிக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது. மகன் இறப்புக்கு மனைவியின் அஜாக்கிரதை தான் காரணம் என மனைவியிடம் கடந்த பத்து நாட்களாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவியை அழைத்து வந்து வீட்டில் வைத்து பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். நேற்று இரவு திரும்பி வந்து பார்க்கும்போது சரஸ்வதி வீட்டில் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் தந்தை கன்னியப்பன், தாய் இந்திராணியிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கும் கஜேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடந்த கஜேந்திரன் கன்னியப்பனை தாக்கியுள்ளார்.

இதில் கன்னியப்பன்(70) மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த சோளிங்கர் போலீசார் சடலத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் கஜேந்திரனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com