கார் வாங்கித் தர தந்தை மறுப்பு - வாலிபர் தற்கொலை!

கார் வாங்கித் தர மறுத்து திட்டியதால் வாலிபர் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கார் வாங்கித் தர தந்தை மறுப்பு - வாலிபர் தற்கொலை!
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி கஸ்பா புதுத்தெருவைச் சேர்ந்த முருகானந்தத்தின் மகன் பவித் குமார் (28). இவர் சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பரமன்குறிச்சிக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில், தனக்குச் சொந்தமாக கார் வாங்கித் தருமாறு தனது தந்தையிடம் பவித் குமார் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்ததுடன், அவரைத் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையில் இருந்த பவித் குமார், வீட்டின் உள்ளே மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்செந்தூர் போலீசார், பவித் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருச்செந்தூர் உதவி ஆய்வாளர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com