இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவி அந்தரங்க படத்தை வெளியிட்ட தந்தை,மகன் கைது

இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவி அந்தரங்க படத்தை வெளியிட்ட தந்தை,மகன் கைது செய்யப்பட்டனர்.
இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவி அந்தரங்க படத்தை வெளியிட்ட தந்தை,மகன் கைது
Published on

குமரி,

மும்பையை சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி ஒருவர், விடுமுறை நாட்களில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்த நிலையில், அந்த கல்லூரி மாணவி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான சுஜித் என்பவர், தனது அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் அனுப்பி வைத்த பிறகும் மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் கேட்டு அவரது தந்தையும் சேர்ந்து மிரட்டியதாகவும், பணம் இல்லை என்று கூறியதால், தனது அந்தரங்க புகைப்படத்தை சுஜித் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து, வளசரவாக்கம் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், கல்லூரி மாணவி கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா மேக்கோடு பகுதியை சேர்ந்த சுஜித் என்பவரையும், அவரது தந்தை வின்சென்ட் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சுஜித் பிளஸ்-2 படித்தவர் என்பதும், முதலில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாகவும், பிறகு மாவுக்கடை ஒன்றில் வேலையும் பார்த்துள்ளார். அவரது தந்தை வின்சென்ட் கூலித் தொழிலாளி ஆவார். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com