'நீட்' தேர்வு எழுதிய தந்தை-மகன்

‘நீட்’ தேர்வு எழுதிய தந்தை-மகன்.
'நீட்' தேர்வு எழுதிய தந்தை-மகன்
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் காத்தையன (வயது 50). கடந்த 1992-ம் ஆண்டு கோட்டூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ளார். பெயிண்டரான இவர், கோவில்களில் சாமி உருவங்களை வரைவார்.

இவருடைய மகன் குமரன், பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று திருவாரூர் வேலுடையார் பள்ளியில் நடந்த நீட் தேர்வை தந்தை, மகன் ஆகிய இருவரும் எழுதினர்.

இதுகுறித்து காத்தையன் கூறுகையில், டாக்டராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இதற்காக கணிதம், அறிவியல் சம்பந்தமான பாடப்புத்தகங்களை படித்து வந்தேன்.

தற்போது நீட் தேர்வு எழுத வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால் இந்த தேர்வை எழுத முடிவெடுத்தேன். எனது மகனும் டாக்டராக வேண்டும் என்பது எனது குறிக்கோள். இதனால் இருவரும் நீட் தேர்வு எழுத வந்தோம்.

நானும், எனது மகனும் எந்தவித பயிற்சி மையத்திற்கும் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து சேர்ந்து படித்து தேர்வுக்கு தயாரானோம். எனக்கு தற்போது 50 வயது ஆகிறது. மருத்துவ படிப்பு 5 ஆண்டுகள் படித்தாலும், மீதம் உள்ள 5 ஆண்டுகள் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே எனது இலக்கு, கனவு, ஆசை. அது நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com