இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற தந்தை - சிதம்பரத்தில் பரபரப்பு


இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற தந்தை - சிதம்பரத்தில் பரபரப்பு
x

வீட்டில் இருந்த அபிதாவை அவரது தந்தை அர்ஜுனன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் அபிதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், வீட்டில் இருந்த அபிதாவை அவரது தந்தை அர்ஜுனன் இன்று கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில் இளம்பெண் அபிதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

மகளை கொலை செய்துவிட்டு அர்ஜுனன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான அர்ஜுனனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் தற்போது காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காதல் விவகாரத்தால் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story