மதுபோதைக்கு அடிமையான தந்தை... மனவேதனையில் மாணவி எடுத்த விபரீத முடிவு

மதுபோதையில் தந்தை தரக்குறைவாக பேசியதால் மனவேதனையில் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுபோதைக்கு அடிமையான தந்தை... மனவேதனையில் மாணவி எடுத்த விபரீத முடிவு
Published on

திருப்பூர்,

திருப்பூர் காங்கயம் ரோடு, விஜயாபுரத்தை அடுத்த மருதப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருடைய மகள் சாதனா. இவர் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். மது போதைக்கு அடிமையான சாதனாவின் தந்தை வீரப்பன் மது போதையில் வந்து குடும்பத்தில் தினமும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சாதனா வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த வீரப்பன் தகராறு செய்து உள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த சாதனா, தந்தையிடம் குடிப்பழக்கத்தை கைவிடும்படி கேட்டு உள்ளார். அப்போது அவர் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஜயபுரம் கருப்பராயன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் நல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, அவரின் உடலை தேடினர். இரவு வெகுநேரமாகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் தேடும் பணி நடந்தது. இதில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com