அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
Published on

அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் துரைசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் உலகநாதன், மாவட்ட செயலாளர் மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது காரை ஏற்றி படுகொலை செய்த சதிக்கு காரணமான மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா டெனியை பதவி நீக்கம் செய்யக்கோரியும், அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இதில் தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் மகேந்திரன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com