வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு


வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2025 11:34 AM IST (Updated: 27 Feb 2025 11:56 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்படும் என்ற தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மதுரை

மதுரை மாநகராட்சி மாவமன்ற கூட்டத்தில் ஒருசில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பாக வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்படும் என்ற தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி

வீடுகளில் பறவைகள் மற்றும் செல்லப்பிரானிகள் வளர்ப்பதற்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

மாடு வளர்க்க ரூ.500 கட்டணமும், குதிரை வளர்க்க ரூ.750 கட்டணமும், ஆடு வளர்க்க 150 ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாய், பூனை வளர்க்க 750 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வகையான விகை நிற்னயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் எப்போது அமலுக்கு வரும் என விரைவில் மாநகராட்சி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story