மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தி.மு.க. பிரமுகர் பலி

வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தி.மு.க. பிரமுகர் பலியானார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தி.மு.க. பிரமுகர் பலி
Published on

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள விருதலைப்பட்டி ஊராட்சி மக்கள்நகரை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 35). தி.மு.க. கிளை செயலாளர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன், மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர், மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். மினுக்கம்பட்டி பிரிவு அருகே வந்த போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. இதைப்பார்த்த ராஜீவ்காந்தி, நாய் மீது மோட்டார் சைக்கிளை மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டு நிறுத்த முயன்றார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜீவ்காந்தி தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ராஜீவ்காந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com