பெண் போலீசை காதலித்து ஏமாற்றியதாக, சக போலீஸ்காரர் கைது

நானும், போலீஸ்காரர் அஜய் ஆகாசும் போலீஸ் வேலைக்கு சேர்வதற்கு முன்பே பழக்கமானோம்.
பெண் போலீசை காதலித்து ஏமாற்றியதாக, சக போலீஸ்காரர் கைது
Published on: 

சென்னை,

சென்னையில் பெண் போலீசை காதலித்து, குடும்பமும் நடத்திவிட்டு, பின்னர் சாதியை காரணம்காட்டி, அவரை திரு மணம் செய்ய மறுத்த புகாரில் சக போலீஸ்காரர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

போலீஸ்காரர் அஜய்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அஜய் ஆகாஷ் (வயது 26). திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீ சில் பணியாற்றினார். இவர் மீது கடந்த ஜூன் மாதம் சென்னையில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவர் எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத் தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது சொந்த ஊர் அறந்தாங்கி. நானும், போலீஸ்காரர் அஜய் ஆகாசும் போலீஸ் வேலைக்கு சேர்வதற்கு முன்பே பழக்கமானோம். கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே இருவரும் ஒருவரை, ஒருவர் காதலித்தோம். புதுக்கோட்டையில் குத்துச்சண்டை பயிற்சியின்போது, நாங்கள் இருவரும் முதலில் சந்தித்தோம்.

உயிருக்கு உயிராக பழகினோம். நான் கடந்த 2020-ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு சேர்ந்தேன். 2022-ம் ஆண்டு அஜய் ஆகாசும் போலீஸ் வேலைக்கு சேர்ந்தார். அதன்பிறகு எங்கள் காதல் தீவிரமானது. அடிக்கடி இருவரும் சந்திப் போம். 2025-ம் ஆண்டில் சுமார் 9 மாதங்கள் நானும், அஜய் ஆகாசும் நான் வசிக்கும் நரியங்காடு வீட்டில் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். என் வீட்டில் திருமணத்துக்கு சம்மதித் துவிட்டார்கள்.

சாதியை சொல்லி...

ஆனால் அஜய் வீட்டில் எனது சாதியை காரணம் காட்டி, திருமணத்துக்கு மறுத்தார்கள். அஜய்யும், அவரது குடும்பத்தினர் பேச்சைக்கேட்டு, திடீரென்று மனம் மாறினார். வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். நிச்சயதார்த்தமும் நடந்துவிட்டதாக தெரிகிறது. என்னை காதலித்து, என்னோடு குடும்பமும் நடத்தி ஒன்றாக வாழ்ந்தவர், சாதியை சொல்லி என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். போலீஸ்காரர் அஜய் மீது சட்டப்பூர்வ நட வடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

கோர்ட்டில் சரண்-கைது

இந்த புகார் மனு தொடர்பாக எழும்பூர் அனைத்து மகளிர் போலீசார், 4 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ்காரர் அஜய் தலைமறைவாகியிட்டார். நேற்று முன்தினம் சென்னை கோர்ட்டு ஒன்றில் அவர் சரணடைந்தார்.

கோர்ட்டு உத்தரவின்பேரில் குறிப்பிட்ட பெண் போலீசும், நேரில் சென்று அதே கோர்ட்டில் ஆஜரானார். அப்போது போலீஸ்காரர் அஜய் தன்னை ஏமாற்றியது குறித்து, பெண் போலீஸ் நீதிபதியிடம் மிகவும் உருக்கமாக முறையிட்டார். அதனை கேட்ட நீதிபதி, போலீஸ்காரர் அஜய்யை கைது செய்யும்படி, எழும்பூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அஜய் ஆகாஷ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

X