ஓடும் ரெயிலில் பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை; திருச்சி பேராசிரியர் கைது

ஓடும் ரெயிலில் பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருச்சி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
ஓடும் ரெயிலில் பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை; திருச்சி பேராசிரியர் கைது
Published on

சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் சந்திரபிரசாத் (வயது 37). இவர் திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை கோவையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயிலில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ரெயிலில் பயணித்த 26 வயதுடைய பெண் வக்கீலுக்கு சந்திரபிரசாத் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் வக்கீல் சந்திரபிரசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்ததும் அந்த பெண் வக்கீல், ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி சந்திரபிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com