கிணற்றில் பெண் பிணம்

தொப்பூர் அருகே கிணற்றில் பெண் பிணம் மிதந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிணற்றில் பெண் பிணம்
Published on

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே செக்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி மேனகாகாந்தி (வயது 35). இவர்களுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே வீட்டுக்கு அருகே உள்ள விவசாய கிணற்றில்மேனகாகாந்தி பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மேனகாகாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மேனகாகாந்தி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அவர் எப்படிஇறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com