கிணற்றில் பெண் பிணம்

கிணற்றில் பெண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் பெண் பிணம்
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்த பரமசிவம் மனைவி பொன்மாரி (வயது 34). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இ்ந்தநிலையில் அவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்து பொன்மாரியை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com