லாட்ஜில் நிர்வாண கோலத்தில் பெண் மரணம் ; இரவில் உடன் இருந்த கணவரின் தம்பியிடம் விசாரணை

ஏற்காடு சுற்றுலா வந்த பெண்மணி மர்மமான முறையில் உயிரிழப்பு கொலையா தற்கொலையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்ஜில் நிர்வாண கோலத்தில் பெண் மரணம் ; இரவில் உடன் இருந்த கணவரின் தம்பியிடம் விசாரணை
Published on

ஏற்காடு:

கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் விஜய் (30) . இவர் தனது அண்ணன் பிரபு மனைவி மஞ்சு (26) இருவரும் ஏற்காடு சுற்றுலா வந்துள்ளனர்.

ஏற்காட்டிற்கு வந்தவர்கள் தனியார் தங்கும் விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து நேற்று இரவு தங்கி உள்ளனர். இருவரும் தங்கியிருந்த நிலையில் விஜய் இரவு மது அருந்திவிட்டு தனக்கு வரும் 23ஆம் தேதி திருமணம் நடக்கப் போவதாகவும் திருமணத்திற்கு பின்னர் தங்களது நட்பை தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மது போதையில் இருவரும் தூங்கி விட்டனர். திடீரென இரவு மூன்று மணியளவில் விஜய் கண்விழித்து பார்த்தபோது மஞ்சுவை காணவில்லை.

அதிர்ந்து போன விஜய் கழிவறையில் நீர் விழும் சத்தம் கேட்க மஞ்சு கழிவறைக்கு சென்று இருக்கலாம் என எண்ணிக்கொண்டு விட்டுவிட்டார். வெகுநேரமாகியும் மஞ்சு வராததால் கழிவறையின் கதவை உடைத்து பார்த்துள்ளார். அங்கு மஞ்சு நிர்வாணமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதை தொடர்ந்து விஜய் மஞ்சுவை தூக்கிவந்து படுக்கையில் கிடத்தி துணிகளை போட்டுவிட்டு தண்ணீர் தெளித்தும் எழுந்திருக்கவே இல்லை எனக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏற்காடு இன்ஸ்பெக்டர் ரஜினி சப்-இன்ஸ்பெக்டர்கள் சபாபதி மற்றும் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த மதன் விஜய் மற்றும் பிரபு ஆகியோர் அண்ணன் தம்பிகள். அண்ணன் பிரபு கடந்த 2017ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார் அப்போது ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக இருந்துள்ளனர். பிரபுவுக்கும் மஞ்சுவுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன

தனிமை காரணத்தால் அண்ணி மஞ்சுவுக்கும் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. அண்ணன் ஊரில் இல்லாததால் நட்பு தொடர அது கள்ளகாதலாக மாறியது. இவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமானதால் இருவரும் உல்லாசமாக இருக்க அடிக்கடி ஏற்காடு வந்து உள்ளனர்.

கொரோனா காரணமாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய பிரபு தனது மனைவியுடன் கச்சராபாளையம் என்ற பகுதியில் தனிக்குடித்தனம் சென்று விட்டார்.

இந்நிலையில் விஜய்க்கு திருமணம் என்ற செய்தி கேட்டதும் மஞ்சு தான் எங்கே செல்வது என கேட்டு இருவருக்குள் நேற்றிரவு வாக்குவாதம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மஞ்சு தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com