முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய பெண் டாக்டர்!

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
விஜய்
Published on

சென்னை,

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.

ஆட்டோகிராப்

அப்போது, பெண் டாக்டர் ஒருவர் முதல்-அமைச்சரிடம் ஆர்வம் மிகுதியால் ஆட்டோகிராப் கேட்டார். அப்போது, முதல்-அமைச்சரிடம் பேனா இல்லை. உடனே அந்த பெண் டாக்டரிடமே பேனா கேட்டார். அவரும் தனது பையில் இருந்து எடுத்து கொடுக்க, பணி ஆணையின் பின்புறத்தில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். அந்த பெண் டாக்டரும் மகிழ்ச்சியுடன் மேடையைவிட்டு கீழே இறங்கினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com