மொபட் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலி

மொபட் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலியானார்.
மொபட் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலி
Published on
Updated on

அரியலூர் மாவட்டம் ராயபுரம் தாலுகா வெள்ளூர் மேல தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சித்ரா (வயது 38). இவர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் உள்ள மின்வாரிய அலுவலத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் பதவி உயர்வு பெறுவதற்காக துவாக்குடி அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பகுதி நேரமாக இ.இ.இ.படித்து வந்தார்

இந்நிலையில் நேற்று கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு மாலை நண்பர் ஒருவருடன் மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். காட்டூர், கைலாஷ் நகர் அருகே வந்தபோது, பின்னால் வந்த மொபட் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சித்ராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com