பெண் ஊழியர் தற்கொலை

பெண் ஊழியர் தற்கொலை
பெண் ஊழியர் தற்கொலை
Published on

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்தவர் மேகலாப்பிரியா (வயது24). இவர் லேப் டெக்னீசியனாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். கோவை ரத்தினபுரி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று மேகலாப்பிரியா வேலைக்கு செல்லவில்லை. அக்கம், பக்கத்தினர் அவர் தங்கி இருந்த அறை நீண்டநேரமாக பூட்டிகிடப்பதை பார்த்து கதவை திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது அங்கு மின்விசிறியில் மேகலாப்பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசுஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com