திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ள முயற்சி: கோவில் பூசாரி மீது பெண் என்ஜினீயர் பரபரப்பு புகார்

சென்னை பாரிமுனையில் உள்ள பிரபல அம்மன் கோவிலில் பூசாரியாக கார்த்திக் முனுசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.
திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ள முயற்சி: கோவில் பூசாரி மீது பெண் என்ஜினீயர் பரபரப்பு புகார்
Published on

விருகம்பாக்கம்,

விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் என்ஜினீயர் ஒருவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கோவில் பூசாரி மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறேன். சென்னை பாரிமுனையில் உள்ள பிரபல அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட அடிக்கடி சென்ற எனக்கு, கோவிலில் பூசாரியாக பணியாற்றி வரும் கார்த்திக் முனுசாமி என்பவர் பழக்கமானார். நாங்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், சொகுசு காரில் அவரது வீட்டுக்கு அழைத்து சென்ற கார்த்திக் முனுசாமி, தீர்த்தம் எனக்கூறி திரவம் ஒன்றை கலந்து கொடுத்து குடிக்க கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கிய நிலையில் என்னை கற்பழித்து விட்டார். பின்னர் ஆசைவார்த்தை கூறி அம்மன் கோவிலில் தாலி கட்டி என்னை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தனது கருவை கலைத்து விட்டதாகவும், அதன் பிறகு தன்னை பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாகவும் அந்த புகார் மனுவில் குற்றம் சாட்டினார்.

இது குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்ட பெண் என்ஜினீயரை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்திய கோவில் பூசாரி மீது பெண் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com