

சென்னை,
வீட்டில் இருந்தபடி தொழில் செய்யும், பகுதி நேரமாக பணிபுரியும் பெண் தொழில் முனைவோர்களுக்கான சுயசக்தி விருதுகள் வழங்கும் விழாவை பிராண்ட் அவதார் நிறுவனம் கடந்த ஆண்டு நடத்தியது. அதேபோல், சுயசக்தி விருது-2018 வழங்கும் விழா வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி இசை மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் சென்னையில் நடைபெற இருக்கிறது.
கடந்த ஆண்டு இந்த விருதுகள் பெற 4 ஆயிரத்து 328 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு சுயசக்தி விருதுகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் இந்த ஆண்டு சுயசக்தி விருதுகள் பெறுவதற்கு தகுதியுள்ள பெண் தொழில் முனைவோர்கள்
www.homepreneurawards.com, www.suyasakthi.com என்ற இணையதளத்தில் சென்று வருகிற 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.