சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் உடற்பயிற்சியாளர் காயம்

சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் உடற்பயிற்சியாளர் காயமடைந்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் உடற்பயிற்சியாளர் காயம்
Published on

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ சாலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அங்கு வந்த ஸ்கூட்டர் மீது திடீரென பயங்கரமாக மோதியது. இதில் ஸ்கூட்டரில் வந்த நாமக்கல் கவிஞர் மாளிகை உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர்களாக பணிபுரியும் சரவணன் மற்றும் நிலா ஆகியோர் சிறு காயங்களுடனும் உயிர் தப்பினர்.

இந்த பதற்றத்தில் கார் டிரைவர் சுலைமான், பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரில் காலை வைத்து விட்டார். எனவே அந்த கார் ஸ்கூட்டர் மீது ஏறி நின்றது. இதை நேரில் பார்த்த தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விபத்தில் காயமடைந்த பெண் பயிற்சியாளரை மீட்டு தலைமைச் செயலகத்தில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் வந்து சொகுசு காரை ஓட்டி வந்த நாவலூரைச் சேர்ந்த சுலைமான் (வயது 35) என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com