புதுக்கோட்டையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி..!

புதுக்கோட்டையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி..!
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் திருகோகரணம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் வழக்கறிஞர்கள் கொடுத்த மன அழுத்தமே தற்கொலை முடிவுக்கு காரணம் என்று வருகைப் பதிவேட்டில் சங்கீதா எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com