பெண் தற்கொலை

திண்டுக்கல்லில், கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பெண் தற்கொலை
Published on

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி மருதராஜ். இவருடைய மனைவி ராணி (வயது 42). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 30 நாட்களுக்கு முன்பு மருதராஜ் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இறப்பை தாங்க முடியாமல் ராணி புலம்பி தவித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

இதற்கிடையே நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் கணவர் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் ராணி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com