விஷம் குடித்து பெண் தற்கொலை

நாமக்கல்லில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

நாமக்கல் நல்லிபாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி சத்யா (வயது 28). முருகானந்தம் மது குடிக்கும் பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த சத்யா கடந்த 11-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி சத்யா பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com