தூக்குப்போட்டு பெண் தற்கொலை

மூங்கில்துறைப்பட்டு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை போலீசார் விசாரணை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் பத்தியநாதன் மனைவி செலின்மேரி(வயது 46). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் செலின்மேரி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இது குறித்து வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செலின்மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com